தலித் ரத்தம் குடிக்கும் தமிழ் ஜாதி!
ஜெயாவுக்கும் சசிகலாவுக்கும் உடனடி கைதி உடை வேண்டும்!
-சாக்ய மோஹன்-
தலை மயிரில்
ஈறாய் பேனாய் மேய்ந்து கடித்து
ரத்தம் குடித்து
ஊதிப் பெருத்த தமிழ் ஜாதிகள்
எமது உயிரை மாய்க்கும்
கொடும் வல்லூறுகளாக
எமது காலனிகளை வட்டமிட்டுள்ளன!
'தமிழ்' புன்னகை காட்டி
எமை உள்ளிழுத்து
தேசிய குழி பறித்து அதில் தள்ளி
ஜாதிச் சீழ் வடிய
தீண்டாமை வெறி ஒழுக
தம் சூத்திர கோரைப் பற்களால்
கொத்து கொத்தாய்
கொத்தி தின்கிறது
முக்குலத்து தமிழ் ஓநாய்!
புலிகளும் சிறுத்தைகளும்
வேடிக்கை பார்க்கும்
தீண்டாமைப் பேரில்
முக்குலத்து கழுதை-புலிகள்
எம் தலித் பிணங்களையும்
தின்று முடிக்கும் வரை!
சூத்திரனின் எல்லா நாவுகளிலும்
ஜாதிவெறி வழிந்தது
தேவேந்திரனின் தீண்டாத ரத்தமும்
பரமக்குடி சாலை எங்கும் வழிந்தது
தீட்டாய் முடக்கப்பட்ட
தேவேந்திரன் உடலும் உயிரும்
தீமூட்டியது கள்ள-மறவனின் நெஞ்சில்!
தீண்டாமையை
கோயிலுக்குள் வணங்கிவிட்டு
வெளியேறிய 'தேவ' ஜாதிகள்
கோயிலுக்குள் கூத்தியாளையும்
கும்பிடும் காமக்கொடூரமே தமிழ் கலாச்சாரமோ?
தெற்கில் தேவேந்திரர் எழுச்சி
முச்சாதிக் காரனுக்கு
மூத்திரம் நின்றுபோனது!
தேவேந்திரன் காலில் செருப்பணிந்து நடந்தால்
தேவனின் கண்ணில் முள் குத்தியதோ?
அறுவடைக்குப் பின்
வயலில் சிதைந்த நெற்கதிரை பொறுக்கும்
எம் இந்திரர் வேளாண்குடி!
மாறாக, விந்தை ஒன்றுமில்லையோ?
கழனியில் பீப் பொறுக்கும்
கள்ள ஜாதிகள்
தீண்டாதார் வாயில் திணிக்க!
ரெட்டை டம்ளர் மாட்டிவைக்க
தனி குச்சி நடும்போதே
சூத்திர தரகர் மூக்கை
உடைத்திருக்க வேண்டும்
இன்று பரமக்குடி சாலை வரை
தீண்டாமை ரத்தக் கசிவு!
இனியும்
சூத்திர தலைவர்கள் தமிழ் தலைவர்கள்
என்ற மாயைகளை உடைக்காவிட்டால்
நம் விடுதலை களம் யாவும்
வெறும் தோல்வியின்
ரத்தக் கசிவாய் மிஞ்சும்
நம் மண்டையில் குடிகொண்ட
நாய்க்கனை சுத்தமாக கழுவி எடு!
தமிழிய போதையிலிருந்து வெளியேறு!
தமிழனின் சூத்திர காட்டுக்குள் பதுங்கி இருக்கும்
ஜாதிப் புலிகளை அறிந்துகொள்!
ஜாதியற்றவன் நீ என்றுணர்!
தீண்டாமை தீட்டை தீயிடு
தீப்பிழம்பாய் எழும் ஞானப் பறவையாய்!
தோழியின் சிற்றின்பத்திற்காக
தலித் குடிகளை கொல்லத் துணிந்த
ஜெயாவுக்கு வேண்டும்
நிலையான கைதி உடை!
போலீசு துப்பாக்கி
சுட்டுப் பொசுக்கிய நம் மக்கள் உயிர்
உலகத்தின் கூரைகளை உலுக்கும்
உன்னதப் போர் காத்திருக்கிறது
ரத்தமில்லாமல் குரூரம் இல்லாமல்!
பரமக்குடியில் விதைக்கப்பட்ட
தேவேந்திரன் உயிர்
தமிழ் ஜாதி பூமியை
பிளந்து வென்று முளைக்கட்டும்!
போதியின் கிளைகளாய் பரவட்டும்!
சாக்கயரின் ஒற்றை வெண்குடை கீழ்
ஒற்றை முகமாய் திரளட்டும்
தேவேந்திரரும், அருந்ததியரும்
ஹீனப் பறையர் எனும் தேரர் பெருங்குடிகளும்
இன்னபிற தீண்டா குடிகளும்!
தமிழகம் இன்னொரு அனல்வாதம் புனல்வாதம்
காண தயாராகிறது!
இந்தமுறை கழுமரம் யாருக்கென்று
தீர்மானிக்கட்டும் தீண்டாகுடிகள்!
--
Sakya Mohan
Editor, Dalit Abroad
Philadelphia
Friday, September 16, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment